
ஐசிசி உலகக்கோப்பை லீக் 2 கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியில் ஆண்ட்ரிச் கௌஸ், கேப்டன் மொனாங்க் படேல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், சமித் படேல் 48 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய்தேஜா முக்காமல்லா - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
இதன்மூலம் அமெரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மிலிந்த் குமார் 155 ரன்களையும், சாய்தேஜா முக்காமல்லா 107 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் ஆசிஃப் கான் 51 ரன்களையும், ராகுல் சோப்ரா 52 ரன்களையும், பசில் ஹமீத் 50 ரன்களையும் சேர்த்தனர்.