
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 16ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றில் முடிவில் 10 வெற்றிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. எட்டு வெற்றி மற்றும் ஒரு ட்ராவுடன் 17 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடித்தது.
இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றது.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் வெளியேறி இருப்பதால், அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.