-mdl.jpg)
பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. பின்னர் தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அணியில் லிட்டன் தாஸ் சதமடித்தும், மெஹிதி ஹசன் அரைசதம் கடந்தும் அசத்த அந்த அணி 262 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 172 ரன்னில் சுருண்டது. மேலும் அந்த அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தரப்பில் ஜாகிர் ஹசன் 31 ரன்களையும், சாத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜாகிர் ஹசன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி வந்தார்.