
Mitchell Owen Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஓவன் சில சாதனைகளைப் படைத்துள்ளர்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேமரூன் க்ரீன் 51 ரன்களையும், அறிமுக வீரர் மிட்செல் ஓவன் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.