ENG vs NZ, 2nd ODI: அபார கேட்ச் பிடித்து மிரட்டிய மிட்செல் சாண்ட்னர்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டெவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது டாஸ் போடப்பட்டது.அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி ப்ரூக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ரன்கள் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஹாரி ப்ரூக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து மொயீன் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை விளையாடி வருகிறது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் நினைத்ததை வீட வேகமாக பேட்டில் பட, அது பவுண்டரியை நோக்கி சீறிப்பய்ந்தது. ஆனால் அப்போட்டு சர்கிளுக்கு இருந்த மிட்செல் சாண்டனர் அபாரமாக தாவி கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் மிட்செல் சாண்ட்னர் கேட்ச் பிடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Some catch
— England Cricket (@englandcricket) September 10, 2023
Jonny Bairstow is forced to depart early...#EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/hrB15EWVgt
இங்கிலந்து அணி தொடக்க வீரர் பேர்ஸ்டோ 6 ரன்களும் , பின்னர் வந்த ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமலும் , ஸ்டோக்ஸ் 1 ரரன்களும் எடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .இதனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now