
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாளர் இன்றி முடிந்ததால் அப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால், இப்போட்டியில் விளையாட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.