-mdl.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியை வென்று ஜிம்பாப்வே அணி வரலாறு படைத்துள்ளது . ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது.
முதல் இரு ஆட்டங்களை எளிதாக வென்று தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் முழு பலம் கொண்ட ஆஸி அணி எதிர்பாராதவிதமாக 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் வார்னர் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 94 ரன்கள் எடுத்தார். 28 வயது சுழற்பந்து வீச்சாளர் ரையன் பர்ல், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் எளிதான இலக்கை விரட்ட ஜிம்பாப்வே தடுமாறினாலும் 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே அணி தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது.