
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது. ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆஷஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது.
இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வழக்கம்போல இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி அதிரடியில் ஈடுபட்டது. அதிரடியாக விளையாடிய பென் டக்கட் 41 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.