
WI vs AUS: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்காக காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்! (Image Source: Google)
West Indies vs Australia Test 2025: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்