
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை மிதாலி ராஜ். கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடிவந்த மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 699, 7805, 2364 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். 23 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி, மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்த மிதாலி ராஜ், கடந்த் ஜூன் 8 ஆம் தேதி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.
மிதாலி ராஜின் ஓய்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி பிரதமர் மோடி மிதாலி ராஜுக்கு தெரிவித்திருந்த வாழ்த்து செய்தியில், “சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்காற்றிய உங்களுக்கு (மிதாலி ராஜ்) எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நூற்றுக்கணக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு நீங்கள் ரோல் மாடல்.