
பிசிசிஐயின் தலைவராக சௌரவ் கங்குலி பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மூன்று ஆண்டுகள் பிசிசிஐ தலைவராக செயலாற்றிய ரோஜர் பின்னி, 70 வயதை ஏட்டியதன் காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏனெனில் பிசிசிஐ தலைவராக செயல்படுவோம் 70 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற விதி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையாடுத்து பிசிசிஐயின் இடைக்கால தலைவராக ராஜூக் சுக்லா செயல்பட்டார். தலைவர் பதவிக்கான விண்ணபங்களையும் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. மேலும் பிசிசிஐயின் புதிய தலைவருக்கான போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டமானது மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) புதிய தலைவராக முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (ஜே.கே.சி.ஏ) முன்னாள் கிரிக்கெட் வீரரான மன்ஹாஸ், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.