
மேஜர் லீக் கிரிக்கெட் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சியாட்டில் ஓர்காஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வெனற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 13 ரன்களிலும், மில்லர் ஒரு ரன்னிலும், சாண்ட்னர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய டுவைன் பிராவோ - டேனியல் சாம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிராவோ 39 ரன்களையும், டேனியல் சாம்ஸ் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சியாட்டில் அணி தரப்பில் கேப்டன் வெய்ன் பார்னெல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.