
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து 26 ரன்களில் ஜேசன் ராயும், 35 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களிலும், நிதீஷ் குமார் 20 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பிராடி கௌச் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஃபின் ஆலன் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 116 ரன்களைச் சேர்த்தனர். பின்னர் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் என 58 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும், 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களில் ஃபின் ஆலனும் விக்கெட்டை இழந்தனர்.