
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி மிட்செல் ஓவன் மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலமாக த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மொனாங்க் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிக்கோல பூரன் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேஸ்வெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இத்ன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் மேக்ஸ்வெல், ஓவன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.