
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையிலும், எம்ஐ கேப்டவுன் அணி ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியனது மழை காரணமாக தாமதமானது. இதன் காரணமாக இப்போட்டியானது 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணியில் தொடக்க வீரர் மொனாங்க் படேல் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் தஜிந்தர் தில்லான் தலா 12 ரன்னிலும், ஷரத் லும்பா ரன்கள் ஏதுமின்றியும என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் குன்வர்ஜீத் சிங் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஹெத் ரிச்சர்ட்ஸ் மற்றும் சன்னி படேல் ஆகியோர் தலா 16 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் எம்ஐ நியூயார்க் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.