
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக 64 போட்டிகளில் 2914 ரன்கள், 195 விக்கெட்களை வீழ்த்தி, பெஸ்ட் டெஸ்ட் ஆல்-ரவுண்டராக வலம் வந்த 34 வயதாகும் மொயின் அலி, கடந்த செம்படம்பர் மாதத்தில் திடீரென்று டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அப்போதைய கேப்டன் ஜோ ரூட்தான். மொயின் அலிக்கு உரிய மரியாதையை தராததால்தான் ஓய்வினை அறிவித்தார் என பலரும் விமர்சனங்களை அடுக்கினார்கள். ஆனால், மொயின் அலி இதற்கு பதிலளிக்காமலே இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது. இறுதியில் அதேபோல் ஓய்வினை வாபஸ் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஓய்வினை வாபஸ் வாங்கியதற்கான காரணத்தை மொயின் அலி விளக்கியுள்ளார்.