
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 74 ரன்களையும், சௌத் சகீல் 9 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 75 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய பெஷாவர் ஸால்மி அணியில் சௌம் அயூப் 42 ரன்களையும், கேப்டன் பாபர் ஆசாம் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 68 ரன்களையும் எடுத்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Moment he bhai
— Zaid R. (@zaidi404) February 18, 2024
Babar and Amir pic.twitter.com/bX4eP5hQ7V