
Mohammad Amir to play for Barbados Tridents in maiden CPL stint (Image Source: Google)
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான அணிகள் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பார்படோஸ் டிரைடெண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் முகமது அமீர் முதல் முறையாக சிபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக், நேபாள அணியின் சந்தீப் லாமிச்சானே ஆகியோரும் நடப்பாண்டு கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் அறிமுகமாகவுள்ளார்.