
Mohammad Hasnain To Replace Shaheen Afridi In Pakistan Squad For Asia Cup 2022 (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் 3 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்த தோல்விக்கு ஆசிய கோப்பையில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
கடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி.