Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முகமது கைஃப்!

ஐபிஎல் தொடரின் ஆல் டைன் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், அந்த அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2022 • 16:14 PM
Mohammad Kaif Names His All-Time IPL XI; Includes Six Overseas Players!
Mohammad Kaif Names His All-Time IPL XI; Includes Six Overseas Players! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் கைஃப். இவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு இருவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதேபோலத்தான் 3ம் வரிசை வீரரும்.. 3ம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் கைஃப். 

Trending


4ஆம் வரிசை வீரராக, மிஸ்டர் ஐபிஎல் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரரான சுரேஷ் ரெய்னாவையும், 5ஆம் வரிசையில் டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள கைஃப், விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியை தேர்வு செய்து, அவரையே ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 

தோனி சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்தவர். ரோஹித்தும் மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தான் என்றாலும், தோனி கேப்டன்சியில் அவருக்கும் சீனியர் என்ற முறையிலும் சிறந்தவர் என்ற முறையிலும் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார் கைஃப்.

ஆல்ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகியோரையும், ஸ்பின்னராக ரஷீத் கானையும்,  ஃபாஸ்ட் பவுலர்களாக மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் கைஃப்.

முகமது கைஃபின் ஆல்டைம் சிறந்த ஐபிஎல் லெவன்: கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ், எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சுனில் நரைன், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement