Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: முகமது கைஃபின் பெஸ்ட் பிளேயிங் லெவன்!

இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து கைப் அணியை உருவாக்கியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 29, 2022 • 16:14 PM
Mohammad Kaif picks his IPL 2022 best Playing XI
Mohammad Kaif picks his IPL 2022 best Playing XI (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகள், பிளே ஆஃப் சுற்றுகள் நடந்து முடிந்து இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த 15ஆவது சீசன் கடந்த சீசன்களைவிட, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. 

காரணம் இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு, ஒரு அணி 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பல வீரர்கள் அணி மாறி விளையாடும் நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த வார்னர், டெல்லி அணிக்கு இடமாறினார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் அணி மாறினர்.

Trending


இதனால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஸ்டார் அணிகள், முக்கிய வீரர்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கடைசி இரண்டு இடங்களையும் பிடித்தது. மேலும் புதிதாக வந்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து புள்ளிப் பட்டியலின் டாப்பில் நீடித்து வந்தன.

இந்நிலையில் தற்போது இறுதிப் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. மேலும், இத்தொடரில் நடந்த விஷயங்கள், எந்த அணி சிறப்பாக செயல்பட்டது போன்றவை குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் ஆகியோர் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் வீரர் முகமது கைஃப், இந்த 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து, லெவன் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணியில் ஓபனர்களாக ஜோஸ் பட்லர், கே.எல்.ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள். ராகுலுக்கு கேப்டன் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இடங்களில் டேவிட் வார்னர், ராகுல் திரிபாதி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பினர்களாக ரஷித் கான், யுஜ்வேந்திர சஹல், வேகப்பந்து வீச்சாளர்களாக உம்ரான் மாலிக், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.

முகமது கைப் தேர்வு செய்த ஐபிஎல் 2022 லெவன் அணி: ஜாஸ் பட்லர், கே.எல்.ராகுல் (கேப்டன்), டேவிட் வார்னர், ராகுல் திரிபாதி, லியாம் லிவிங்ஸ்டன், ரஷித் கான், சஹல், உம்ரான் மாலிக், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement