
mohammad-kaif-playing-cricket-in-his-home-with-his-wife-pooja (Image Source: Google)
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக முகமது கைஃப் தனது மனைவி பூஜாவுடன் இணைந்து வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடுவது போன்ற காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.