
Mohammad Shami among the best 3 seamers in the world, says Kohli (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இப்போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த கே.எல். ராகுல், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். செஞ்சுரியனில் மகத்தான வெற்றியை அடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
செஞ்சுரியனில் டெஸ்ட் வென்ற முதல் ஆசிய அணி என்கிற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக செஞ்சுரியனில் டெஸ்ட் வென்ற அணியும் இந்தியா தான்.