பாபர் ஆசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் - முகமது யூசஃப் புகழாரம்!
பாபர் ஆசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் என பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பாபர் ஆசாம். இவர் இந்த 2022ஆம் ஆண்டில் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 15 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,406 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 78.11 ஆகும். இந்த ஆண்டு அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். இந்த ஆண்டில் பாபர் அசாம் மொத்தமாக 5 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், பாபர் ஆசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் என பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாபர் ஆசாம் குறித்துப் பேசிய முகமது யூசஃப் கூறுகையில்,“ கடந்த 2-3 ஆண்டுகளாக பாபர் அசாம் ஒரு சிறந்த வீரர் என்பதை தனது சிறப்பான பேட்டிங் மூலம் நிரூபித்து வருகிறார். அவர் கடினமான சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கேப்டானகவும், ஒரு வீரராகவும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now