
இந்தியாவின் வெற்றிக்கு கடைசி கட்டத்தில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் பல்வேறு புகார்களை பாகிஸ்தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, நடுவர்கள் தவறு செய்ததால் தான் இந்தியா வென்றதாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் நவாஸ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது 19.3வது ஓவர் முடிவில் அடுத்த பந்தை வீசும் போது நவாஸ், தனது எச்சிலை தொட்டு பந்தில் தடவினார். இந்த முறையை ஐசிசி அண்மையில் தடை செய்துள்ளது. முதலில் கரோனா அச்சுறுத்தலால் தடை செய்யப்பட்ட நிலையில், பிறகு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
பந்தை எச்சிலால் தடவி, ஒரு புறத்தில் பளபளவென வைத்து விட்டு, மற்றொரு புறத்தில் பந்தை பழசாக வைத்திருந்தால், ரிவர்ஸ் ஸிவிங் சிறப்பாக செய்யப்படும். மேலும் சுழற்பந்துவீச்சாளர்களும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். தற்போது ஐசிசி தடை செய்ததன் காரணமாக வீரர்கள் எச்சிலை தடவாமல் பந்தை தங்களது உடையில் தேய்த்து வருகின்றனர்.