Advertisement

தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது - முகமது ஷமி!

என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது என குஜராத் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளர். 

Advertisement
Mohammed Shami disappointed after GT’s loss to DC despite bowling a great spell
Mohammed Shami disappointed after GT’s loss to DC despite bowling a great spell (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2023 • 01:41 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் முதல் சுற்றில் மோதிய நிலையில் தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த டெல்லி அணி பத்தாவது இடத்திலும் ஆறு வெற்றிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும் இருந்தது .

Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2023 • 01:41 PM

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணிக்கு பவர் பிளே ஓவர்களிலேயே அதிர்ச்சி அளித்தார் முகமது ஷமி. மிகச் சிறப்பாக பந்து வீசி அவர் தன்னுடைய மூன்று ஓவர்களில் ஆதாரங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் முதல் ஆறு ஓவர்களுக்கு உள்ளேயே டெல்லி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

Trending

அமான் கான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் எட்டி விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது . சிறப்பாக ஆடிய அம்மான் 51 ரண்களை எடுத்தார் . 131 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் ஐபிஎல் தொடர்களில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது . 

அந்த அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் . டெல்லி அணியின் பந்துவீச்சில் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் . இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் . 

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய முகமது ஷமி, “நான் என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப பந்தினை வீசினேன். அதேபோன்று சரியான லைன் மற்றும் லென்த்தில் நான் பந்து வீசியதால் டெல்லி அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக வீழ்த்த முடிந்தது. இந்த போட்டியை எங்களது அணி நிச்சயம் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

131 ரன்கள் என்பது அவ்வளவு கடினமான இலக்கு கிடையாது. இருந்தாலும் எங்களால் இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து நாங்கள் இழந்ததால் நல்ல பார்ட்னர்ஷிப் இன்றி இந்த போட்டியில் தோல்வியடைந்து விட்டோம். என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement