
Mohammed Shami, pace attack picking regular wickets to put Blackcaps in trouble (Image Source: Google)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை.
முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அதே இந்திய அணி இந்த போட்டியிலும் களம் கண்டது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் பின் ஆலன் விக்கெட்டை போல்டு ஆக்கினார் முகமது ஷமி. அத்துடன் இந்திய பவுலர்கள் நிற்கவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். 20 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஹென்றி நிக்கோல்ஸ், சிராஜ் பந்தில் கில் வசம் பிடிபட்டு ஆட்டம் இழந்தார்.