
ஆசியக் கோப்பை தொடர் நேற்று முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியது. இத்தொடரில் நாளை மறுநாள் (செப். 2) இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக சில மாதங்களாக அணியில் இல்லாதிருந்த ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
பும்ரா அணியில் இல்லாதபோது ஷமி மற்றும் சிராஜ் இந்திய அணிக்காக தொடக்க ஓவர்களை வீசினர். தற்போது பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் பும்ராவுடன் இணைந்து புதிய பந்தில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்து வீசுவதில் எனக்கு தயக்கம் எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் மூவரும் (பும்ரா, ஷமி, சிராஜ்) சிறப்பாக பந்து வீசுகிறோம். அணியின் தேவைக்கேற்ப புதிய அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக உள்ளேன். வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது.