
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பெங்கால் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்கால் அணியில் கேப்டன் சுதிப் காமி 99 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் சுதிப் சாட்டர்ஜி 47 ரன்களையும், இறுதியில் அதிரடி காட்டிய முகமது ஷமி 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பெங்கால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது, மஹாராஷ்டிரா அணி தரப்பில் ஆர்யன் பாண்டே, ஆவேஷ் கான் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
அணியின் தொடக்க வீரர்கள் ஹர்ஷ் கௌலி, ஹிமன்ஷு மந்த்ரி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுபம் சர்மா மற்றும் கேப்டன் ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 185 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் சதத்தை நெருங்கிய் ஷுபம் சர்மா 99 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.