
Mohammed Shami tests positive for Covid-19, Umesh Yadav named as replacement (Image Source: Google)
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து முகமது ஷமிக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.