Advertisement
Advertisement
Advertisement

இந்திய டி20 அணியில் ஷமிக்கு வாய்ப்பு உண்டு - பிசிசிஐ அதிகாரி!

டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார்.

Advertisement
Mohammed Shami to make comeback into India’s T20 squad? BCCI official gives BIG Update
Mohammed Shami to make comeback into India’s T20 squad? BCCI official gives BIG Update (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 13, 2022 • 10:37 PM

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 13, 2022 • 10:37 PM

ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. பும்ரா காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாதபோதும், சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆசிய கோப்பைககன அணியில் எடுக்கப்படவில்லை. 

Trending

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே சீனியர் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். அவருடன் இளம் வீரர்களான ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஷமி எடுக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய ஷமி, நமீபியாவுக்கு எதிராக விளையாடியதான் கடைசி டி20 போட்டி. அதன்பின்னர் இந்திய டி20 அணியில் ஷமி எடுக்கப்படவேயில்லை. டி20 உலக கோப்பைக்கு பின் 11 வேகப்பந்து வீச்சாளர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளனர். 

ஆனால் ஷமிக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஷமி டி20 அணியில் புறக்கணிக்கப்படுகிறார். இந்நிலையில், மீண்டும் டி20 அணியில் முகமது ஷமி எடுக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், “ஷமிக்கு வயது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அவரது பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அவர் டி20 அணிகளில் எடுக்கப்படாததற்கான காரணம் அவரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக ஷமி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்படுவார்” என்று அவர் தெரிவித்தார்.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement