ஸ்டம்பில் பட்ட பந்து; விதியால் தப்பித்த வார்னர் - வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்த போது பந்து ஸ்டம்பில் பட்டும், பைல்ஸ் கீழே விழாமல் இருந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டெல்லி ஆடுகளம் இந்தப் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக பந்து கணிக்க முடியாத அளவு ஸ்விங் ஆனது. ஆடுகளத்தில் இருந்த புற்களால் பந்து இவ்வாறு செயல்பட்டது. இதனால் முகமது ஷமி பந்தின் ஸ்விங்கை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
Trending
இந்த நிலையில் , முகமது ஷமி வீசிய ஓவர் ஒன்றில் பந்து வார்னரின் ஸ்டம்பில் பட்டு சென்றது. முதலில் இது வார்னரின் பேட்டில் பட்டதா என்று குஜராத் வீரர்கள் சந்தேகம் அடைந்தனர். ஆனால் அது ரிப்ளேவில் பந்து ஸ்டம்பில் பட்டு சென்றது தெரியவந்தது. ஆனால் இதற்கு அவுட் வழங்கப்படாது.
காரணம், கிரிக்கெட் விதிப்படி, ஸ்டம்ப்பின் பைல்ஸ் கீழே விழுந்தால் தான் அது அவுட்டாக கருதப்படும். தற்போது எல்இடி லைட்கள் பொருந்திய பைல்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பந்து ஸ்டம்பில் பட்டாலும், அது கீழே விழாமல் இருக்கிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) April 4, 2023
ஏற்கனவே பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக ரூல்ஸ்கள் மாறிவரும் நிலையில்,கனமான பைல்ஸ்கள் வைப்பதன் மூலம் பந்து ஸ்டம்பில் பட்டால் கூட ஆட்டமிழக்காமல் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள். இந்நிலையில் இக்கணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now