
நேற்று ஐபிஎல் தொடரில் நடந்த லீக் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாப் 62 மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் வந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 182 ரன்கள் மட்டுமே ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியில் பட்லரை முதல் ஓவரில் ஆட்டம் இழக்க செய்த முகமது சிராஜ்க்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் இந்த தொடர் முழுக்கவே அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் முக்கியமான பரபரப்பான கட்டத்தில் துருவ் ஜுரல் அடித்த பந்துக்கு அஸ்வின் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது நேராக ஃபீல்டிங் நின்ற மகிபால் பந்தை சரியாகப் பிடித்து சிராஜ்க்கு அடிக்காத காரணத்தால் அவர் மீது சிராஜ் கோபப்பட்டு கத்தினார்.
தற்பொழுது இது குறித்து முகமது சிராஜ் மகிபாலிடம் பேசிய பொழுது “நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும். நான் இது குறித்து ஏற்கனவே இவரிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நான் என்னுடைய ஆக்ரோஷத்தை மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லவில்லை. போட்டி முடிந்ததும் எல்லாம் முடிந்து விடும்” என்று கூறினார்.