
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாடு திரும்பவுள்ளார். சிராஜிற்கு மாற்று யார் என்பதை இன்னமும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஒருநாள் அணிக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜெய்ஷ்தேவ் உனாத்கட், உம்ரான் மாலிக், ஷர்தூல் தாகூர், புதுமுக பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதில், முகமது சிராஜிற்கு மாற்றாக முகேஷ் குமார் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 150+ வேகத்தில் பந்துவீசியிருக்கிறார். தற்போது, வெஸ்ட் இண்டீஸி தொடரிலும் அதே வேகத்தில் பந்துவீசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.