
Mohammed Siraj lands in Brisbane to join India squad as standby for T20 World Cup 2022 (Image Source: Google)
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார்.
இதனைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கி உள்ளார்.
காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த முகமது ஷமி முதன்மை அணியில் இணைந்துள்ள நிலையில், முகமது சிராஜ் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்றடைந்த முகமது சிராஜ் பிரிஸ்பேனில் இன்று நடைபெறும் பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.