
Morgan impressed with England's bowling performance in T20I series against SL (Image Source: Google)
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடைப்பெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில், இத்தொடரில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததன் காரணமாகவே எங்களால் இதனை செய்ய இயன்றது என அந்த அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.