
Melbourne Renegades vs Adelaide Strikers Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.
நடப்பு பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடிவுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. மறுபக்கம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
MR vs AS, BBL 2024-25: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்
- இடம்: டாக்லாண்ட்ஸ் ஸ்டேடியம், மெல்போர்ன்
- நேரம்: ஜனவரி 02, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)