Advertisement
Advertisement
Advertisement

‘கேப்டன் 7’ அனிமேஷன் தொடரை தயாரிக்கும் தோனி!

மகேந்திர சிங் தோனி தற்போது 'கேப்டன் 7' என்ற தலைப்பில் அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2021 • 11:58 AM
MS Dhoni announces animated spy series ‘Captain 7’
MS Dhoni announces animated spy series ‘Captain 7’ (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலை சிறந்த ஃபினிஷராகவும் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, அதன்பின் விவசாயம் செய்து தனது பொழுதை கழித்து வருகிறார். 

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவரும் தோனி, தற்போது கேப்டன் 7 என்ற தலைப்பில் அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending


இதுகுறித்து படத்தயாரிப்பாளர்கள் கூறுகையில், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தொனி ‘கேப்டன் 7’ என்ற அனிமேஷன் தொடரை தயாரித்துவருகிறார். இத்தொடரின் முதல் சீசனானது தோனியை மைப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தொடரை தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement