Advertisement

இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு எம் எஸ் தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 03, 2023 • 20:43 PM
MS Dhoni Asked About Retirement Again, Here's His Savage Reply!
MS Dhoni Asked About Retirement Again, Here's His Savage Reply! (Image Source: Google)
Advertisement

16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் முடிவு எட்டப்படாமல் நிறைவுசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

Trending


இந்நிலையில் இப்போட்டியின் டாஸின் போது சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை எப்படி என்ஜாய் செய்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார் அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த தோனி, “இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். நானில்லை” என்று சொல்லி சிரித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement