ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
குஜராத் அணியுடனான இறுதி போட்டியின் மூலம், சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
16ஆவது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அஹமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னை – குஜராத் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றம் எதுவும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இறுதி போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். அதே போல், இறுதி போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இறுதி போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
Trending
இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி, ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளார். சென்னை அணியின் கேப்டனான தோனிக்கு, இது 250வது ஐபிஎல் போட்டியாகும், இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகள் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா 243 போட்டிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆர்சிபியின் தினேஷ் கார்த்திக் 242 போட்டிகளுடன் மூன்றாம் இடத்தையும், விராட் கோலி 237 போட்டிகளுடன் நான்காம் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 225 போட்டிகளுடன் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now