-lg1-mdl.jpg)
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் கோட்டை என்றழைக்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தின் 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அந்த வகையில் இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 4687 ரன்களை எடுத்த முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது மகேந்திர சிங் தோனி 4699 ரன்களைச் சேர்த்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.