ஓய்வு முடிவைக் கூறி அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி!
இப்போது என்னுடைய ஓய்வு முடிவைக் கூறி அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. எப்போது சொன்னால் சரியாக இருக்குமோ அந்த நேரத்தில் கூறுவேன் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மகேந்திர சிங் தோனி.
இந்த வருடம் ஐபிஎல் சீசன் ஆரம்பித்ததில் இருந்து மகேந்திர சிங் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் இத்துடன் ஓய்வு பெறுவார் என்று சிலரும் இன்னும் சிலர் ‘தோனியை பாருங்கள் எவ்வளவு கட்டுக்கோப்பான உடல் தகுதியுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆவது அவர் விளையாடுவார், விளையாட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த சீசன் இதுவரை விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் தோனி முழுக்க முழுக்க பினிஷிங் ரோலிங் விளையாடி வருகிறார். அதில் முன்பை விட இன்னும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருப்பது அவருடைய கால் பகுதியின் ஏற்பட்டிருக்கும் சிறு காயம் தான். அதன் காரணமாக முன்பை போல வேகமாக ரன்கள் ஓட முடியவில்லை. கீப்பிங் செய்யும்போதும் அவ்வப்போது பிசியோவை அழைத்து சிகிச்சையும் பெற்றுக் கொண்டு விளையாடுகிறார்.
Trending
இதைக்கொண்டு சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்று விடுவார் என்றுக்கூறி அதிர்ச்சியை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணி அடுத்ததாக ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக ஒரு நிகழ்வில் பங்கேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட தோனி, ‘தனது ஓய்வு முடிவை எப்போது அறிவிப்பேன்? எந்த நேரத்தில் அறிவித்தால் சரியாக இருக்கும்? என்பது பற்றி சில சூசகமாக பதில் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த சீசனில் இன்னும் நிறைய போட்டிகள் விளையாட வேண்டியது இருக்கிறது. அதன் அழுத்தமே அதிகமாக இருக்கும். நான் எப்போது ஓய்வு பெறுகிறேன் எனக் கூறினால், பயிற்சியாளர் பிளம்மிங் இன்னும் அழுத்தமாக உணர்வார். ஆகையால் நான் ஓய்வு பற்றி இப்போது பேச விரும்பவில்லை. பின்பு பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதை வைத்துப் பார்ப்பதில் தோனி அந்த முடிவை அறிவிப்பதற்காக காத்திருக்கிறார் என்கிற வண்ணம் இருக்கிறது. வழக்கமாக ஓய்வு முடிவை பற்றி கேட்டால் கேட்டவருக்கு தன்னுடைய பாணியிலேயே பதில் கூறுவது அவருடைய வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு சாதகமாகவே பதில் கூறியது போல இருக்கின்றது.
Win Big, Make Your Cricket Tales Now