Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான அல்காரஸ் - ஸ்வெரவ் விளையாடிய போட்டியை, சிஎஸ்கே கேப்டன் தோனி நேரில் கண்டு ரசித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 07, 2023 • 04:25 PM

இந்திய அணியின் கேப்டனும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி. கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஐபிஎல் தொடரின் போதே காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் பின் தீவிர ஓய்வில் இருந்த தோனி, அண்மையில் முழுமையாக குணமடைந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 07, 2023 • 04:25 PM

அதுமட்டுமல்லாமல் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முழு ஃபிட்னஸை எட்டுவதற்காக ஜிம்மிலும் அதிக நேரம் செலவிட்டார். இதனிடையே திடீரென நண்பர்களுடன் தோனி விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார். இது புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்த நிலையில் அமெரிக்காவில் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர், ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Trending

இதன் காலிறுதி ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் அல்காரஸை எதிர்த்து நட்சத்திர வீரர் ஸ்வெரவ் களமிறங்கினார். டென்னிஸ் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அல்காரஸ் விளையாடிய போட்டியை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் தனது நண்பர்களுடன் கண்டு களித்துள்ளார். இந்தப் போட்டியின் போது அல்காரஸ் ஓய்வெடுத்த நிலையில் திடீரென தொலைக்காட்சி கேமரா மேன் தோனியை ஷூம் செய்து காட்டினார். இதனால் அங்கிருந்த டென்னிஸ் ரசிகர்களும் தோனியை அடையாளம் கண்டுகொண்டனர்.

 

இந்த காணொளி தோனி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை பார்ப்பதற்காகவே தோனி அமெரிக்காவுக்கு விடுமுறை சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனிடையே அல்காரஸ் விளையாடிய போட்டியை கண்டதன் மூலம் தோனி, அல்காரஸின் ரசிகர் என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement