Advertisement

ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்த எம் எஸ் தோனி!

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 05, 2022 • 12:12 PM
 MS Dhoni Files Contempt Plea Against Cop For Derogatory Remarks Against Judiciary
MS Dhoni Files Contempt Plea Against Cop For Derogatory Remarks Against Judiciary (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது

இந்த தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனது அறிக்கையில், கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தோனி, தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், அறிக்கை வெளியிட்டதற்காக ரூ 100 கோடி நஷ்டஈடு கேட்டு கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Trending


மேலும் சம்பத்குமார் அறிக்கை தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்திய டி.வி.சேனல், அதன் எடிட்டர் மற்றும் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர்தரப்பாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இது தொடர்பான ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை கலங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளதால், அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்ய அரசு வழக்கறிஞரிடம் தோனி அனுமதி கோரி இருந்தார்.

தற்போது இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி, குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் ஆகியோர் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement