
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ருத்ராஜ் அரை சதத்துடன் 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சேசிங் செய்வதில் மிகப்பெரிய சாதனையை வைத்திருக்கிற அணியாக இருக்கிறது.இந்த நிலையில் குஜராத் இரண்டாவது பேட்டிங் செய்கையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆன் -ஃபீல்டு கேப்டன்சி மேஜிக் போல இருந்தது.
பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம் மற்றும் பீல்டிங் பொசிஷன்களை வைத்த விதம் என்று மகேந்திர சிங் தோனி தனது கேப்டன்சி திறமையை மொத்தமாக அந்த போட்டியில் இறக்கி இருந்தார்.அவரது கேப்டன்சி திறமைக்கான முத்திரை போட்டியாக இந்த போட்டி அமைந்திருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் மகேந்திர சிங் தோனியை பாராட்டி வருகிறார்கள்.