ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் இணைந்துள்ளனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Trending
அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமை ஏற்பாடுசெய்துள்ளது. இதையடுத்து சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் சக வீரர்களுடன் இணைந்துள்ளார்.
A warm hug to the soul! #DenComing #WhistlePodu #Yellove pic.twitter.com/XLin4rnisy
— Chennai Super Kings (@ChennaiIPL) February 26, 2025அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை சந்தித்த பேசிய மகேந்திர சிங் தோனியின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனியைத் தவிர்த்து, வேகப்பந்து வீச்சாளர் குர்ஜபனீத் சிங் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் உட்பட பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
Win Big, Make Your Cricket Tales Now