
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் வெறும் 4 ஆட்டங்களை மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தனது தனிப்பட்ட செயல்பாட்டை பதிவு செய்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரகானே, ஸ்டோக்ஸ் மற்றும் ஜெமிசன் ஆகியோரை வாங்கி புதிய ஒரு அணிக்கலவையை உருவாக்கியது.
தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியையும், ஒரு ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போகவும் 13 புள்ளிகளை எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கவே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!
மகேந்திர சிங் தோனி எப்படியான அணி கலவைகளை உருவாக்குகிறார் என்பது குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, “அவர் காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர். தனது உள்ளுணர்வின்படி இப்படி செய்கிறார். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படாத ஒரு பையனை நம்பி இந்த ஆண்டு தொடர்ந்து போகின்ற தொலைநோக்குப் பார்வை அவரிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு அவர்களுக்கு அந்த நம்பிக்கையை அளித்து, முன்னோக்கி யோசித்து ஒருசில வீரர்களுடன் அவர் வேலை செய்திருப்பார்.