
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்றைய 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் , அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபிஷேக் சர்மா , திரிபாதி இணைந்து சிறப்பாக விளையாடினார்.
தொடர்ந்து ஆடிய அபிஷேக் சர்மா 34 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் திரிபாதி 21ரன்களும் , கேப்டன் மார்க்ரம் 12ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் சென்னை அணி சிறப்பாக பந்துவீசியதால் மயங்க் அகர்வால் 2 ரன்களும் , ஹென்றிச் கிளாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.