
16வது ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் இளம் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் 27 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது, சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்த அதே ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இருவரையும் துசார் தேஸ்பாண்டே விக்கெட் எடுத்த போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.