Advertisement

நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 01, 2024 • 12:09 PM
நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி!
நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில்  பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், ரிஷப் பந்த் ஆகியோரது அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானா 45 ரன்களையும், டேரில் மிட்செல் 34 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதியில் மகேந்திர சிங் தோனி 4 பவுண்டரி,  3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்தார். 

Trending


இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அசத்தினார். அதன்பின் அடுத்தடுத்த பந்துகளி அவர் பவுண்டரியும் சிக்சர்களையும் விளாச ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதிலும் குறிப்பாக ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி அசத்தினார். இந்நிலையில் தோனி சிக்சர்களை விளாசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement